தேனி மாவட்டத்துக்கு 4 புதிய நீதிமன்றங்கள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தேனி மாவட்டத்திற்கு என தனியாகவே ஒரு மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உட்பட 4 நீதிமன்றங்களை துவக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
தேனியில் பெரியகுளம் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட நீதிமன்ற திறப்பு விழா இம்மாத இறுதியில் நடக்கவுள்ளது.தேனி மாவட்டத்திற்கு என சில நீதிமன்றங்கள் மதுரையில் இருந்து மாற்றம் செய்யப்படலாம் என பேச்சு எழுந்தது.இதனால் ஊழியர்கள் தேனிக்கு மாற்றப்படலாம் என அச்சத்தில் இருந்தனர். ஆனால் தேனிக்கு புதிதாகவே ஒரு மாவட்ட முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றம், ஒரு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஒரு முன்சீப் நீதிமன்றம் மற்றும் ஒரு ஜூடிசியல்மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றை துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நீதிமன்றத்திற்கான நீதிபதிகள், ஊழியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளனர். புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழாமுடிந்த கையுடன் உடனடியாக செயல்பட துவங்கும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications