ரூ. 6 லட்சம் மோசடி: பெண் டாக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி ஆவணங்களைக் காட்டி ரூ. 6 லட்சம் மோசடி மற்றும் பலரிடம் நில மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த லதா என்றபல் டாக்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை செளகார்பேட்டையில் அமர் பைனான்ஸ் என்ற கடன் வழங்கும் நிறுவனம் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸில்புகார் ஒன்றைக் கொடுத்தது. அதில் அபிராமபுரத்தைச் சேர்ந்த பல் டாக்டர் லதா என்பவர் தங்களிடம் ரூ. 6 லட்சம் கடன்பெற்றதாகவும், ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் லதாவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது மேலும்பலரிடமும் இதுபோல லதா மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. போலி ஆவணங்களைக் காட்டி பலரிடம் கடன் வாங்கியுள்ளலதா, பல போலியான சொத்துக்களைக் காட்டியும் கடன் வாங்கியுள்ளார்.

ஏற்கனவே சில முறை மோசடிகள் தொடர்பாக லதா கைதாகி சிறை வாசம் அனுபவித்தவர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+