சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம்: ஸ்டார் ஹோட்டல் ஊழியர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காணும் பொங்கலைக் கொண்டாட வந்த 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சென்னையின் பிரபல நட்சத்திரஹோட்டல் ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.சென்னை அமைந்தகரை பகுதியில் வசிப்பவர் வேலாயுதம். இவர் காணும் பொங்கலையொட்டி தனது குடும்பத்தாருடன்நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்கு சென்றார்.
அங்கு வேலாயுதத்தின் தம்பி மகளான 8 வயது சிறுமியிடம் ஹோட்டல் ஊழியர் திணேஷ் என்பவர் பாலியல் சேஷ்டைகளில்ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது அப்பா மற்றும் பெரியப்பாவிடம் புகார் கூறினார்.
இதையடுத்து வேலாயுதம், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நட்சத்திர ஹோட்டல் ஊழியர்திணேஷை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications