புலிகளின் படத்தில் நடித்த நடிகை கொலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகள் அமைப்பு தயாரித்த அம்மா என்ற திரைப்படத்தில் நடித்த போஜன் ரேணுகா என்ற நடிகையும், அவரதுதாயாரும் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்துள்ள நிலையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேஆங்காங்கே மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் உயிர்ப் பலிகள் ஏற்பட்டுள்ள நிலையில் ராணுவத்தின் தரப்பில் தான்அதிக அளவில் இதுவரை சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெற்கு யாழ்ப்பாணம் பகுதியில் மணிபாய் நகர் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், அவரது இருமகள்களும் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகளின் திரைப்படத் தயாரிப்புநிறுவனமான நிதர்சனம் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா என்ற படத்தில் நடித்த நடிகை போஜன் ரேணுகா (வயது 30) ஆவார்.

போஜன் ரேணுகா தவிர அவரது தாய் போஜன் அர்த்தனகேஸ்வரி(வயது 51), மற்றும் அவரது தங்கை போஜன் ஷணுகா (வயது23) ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் அவரது தந்தை போஜன் நாகேந்திரன் (வயது 55), தம்பி போஜன் உல்லாசன் (வயது 26) ஆகிய 2 பேரும்படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே போல தமிழ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். வடமராச்சியில், நெல்லியாடிஎன்ற இடத்தில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்கரைப்பட்டு என்ற இடத்தில் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையேவெடித்த திடீர் மோதலில் 2 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

கண்ணி வெடி தாக்குதல்:

இந்த நிலையில் இலங்கையில் இன்று விடுதலைப்புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் கடற்படை வீரர்கள் 6 பேர்காயமடைந்துள்ளனர். கடற்படை வீரர்கள் வந்து கொண்டிருந்த வாகனம் கண்ணி வெடி தாக்குதலில் சிக்கியது. இதில் பலத்தசேதம் எதுவும் ஏற்படாததால் விடுதலைப்புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து கடற்படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கண்ணி வெடி தாக்குதலில்படுகாயமடைந்த 6 கடற்படை வீரர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த தாக்குதலின் போது பொதுமக்களில் ஒருவரும்காயமடைந்துள்ளார்.

4வது முறையாக கடற்படையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+