நுழைவுத் தேர்வில் பாமக டபுள் ஆக்ட்: ஜெ
சென்னை:
நுழைவுத் தேர்வு விவகாரத்தில் பாமக இரட்டை வேடம் போடுவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பாமக உறுப்பினர் ஆறுமுகம் பேசும் போது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் நீண்ட காலமாகபெரும் முயற்சி எடுத்ததாக குறிப்பிட்டார்.அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசியதாவது:
நுழைவுத் தேர்வு ரத்து பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் பாமக பேசக்கூடாது. கிராமப்புற மாணவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்க நுழைவு தேர்வை ரத்து செய்து அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சிலர் வழக்குப் போட்டனர்.
இந்திய மருத்துவ கவுன்சிலில் நுழைவு தேர்வு நடத்த விதி உள்ளது. எனவே தமிழக அரசின் ஆணையை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அப்பீல் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மத்திய சுகாதார துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் உள்ளார். அவர் மனது வைத்து விதிமுறையை திருத்தி இருந்தால் தமிழகசட்டம் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும். நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட அரசின் ஆணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது.
அதில் பிரதிநிதியாக சேர்க்குமாறு பாமக சார்பில் சிலர் மனு கொடுத்தனர். இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதும் அரசு மட்டுமேஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பாமக உள்பட யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
உண்மையான அக்கறையில்லாத பாமக நுழைவுத் தேர்வு ரத்து குறித்து பேசக்கூடாது. நுழைவுத் தேர்வு வேண்டும் என்று மருத்துவகவுன்சிலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த விதியை அன்புமணி நீக்கியிருந்தால் அரசின் சட்டம் தள்ளுபடி ஆகியிருக்காது.
இதனால் மாணவர்களும், மக்களும் நீங்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதை நம்பமாட்டார்கள். இதன் மூலம் பாமக இரட்டைவேடம் போடுவதை தோளுரித்து காட்டி விட்டேன் என்று கூறினார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications