டெலிபோனை ஒட்டு கேட்கிறாரா ஜெ?: ஆற்காடு
சென்னை:
நாங்கள் பேசாததையெல்லாம் கற்பனையாக கூறி சட்டசபையில் நாடகமாடுகிறார் முதல்வர் ஜெயலலிதா என்று முன்னாள்அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ஆற்காடு வீராசாமி கூறினார்.
சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின்போது பேசிய ஆற்காடு வீராசாமி, ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே நிவாரணம்வழங்கப்படும் என இப்போது அறிவித்திருப்பதை முன் கூட்டியே செயல்படுத்தியிருந்தால், எம்.ஜி.ஆர். நகரில் அத்தனை பேர்இறந்திருக்க நேரிட்டிருக்காது.இந்தச் சம்பவத்தையடுத்த மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறையினரை அரசு மாற்றியது. இதன் பின்னர் யார் மீதாவது பழிபோட வேண்டும் என்பதற்காக தனசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுதமிழக அரசு என்றார்.
இதையடுத்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக தான் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறினார்.
தன்னை வருமான வரித்துறை வழக்குகளில் சிக்க வைக்க முயல்வதாகவும், திமுக கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் தன்னை அந்தப்பொம்பளை என்று குறிப்பிட்டுப் பேசுவதாகவும் அவர் ஆவேசமாக தெரிவித்தார்.
முதல்வரின் இந்தப் பேச்சுக்கு விளக்கம் அளிக்க ஆற்காடு வீராசாமி முயலுகையில் அதற்கு அனுமதி தர சபாநாயகர் காளிமுத்துமறுத்தார். இதையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அவர்களுடன் பாமக, காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்மகேந்திரனின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கியதால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்ந்தஉறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
அனைத்து எதிர்க் கட்சிகளும் வெளியேறிவிட்ட நிலையில், சட்டசபைக்கு வெளியே ஆற்காடு வீராசாமி செய்தியாளர்களிடம்பேசுகையில்,
இந்த அம்மாவைப் பற்றித்தான் நாங்கள் எங்கள் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பேசுகிறோம் என்று கூறுகிறார். நாங்கள்அவரைப் பற்றித்தான் பேசுகிறோம் என்பது இவருக்கு எப்படித் தெரியும்?
டெலிபோனை ஒட்டுக் கேட்கிறாரா? அல்லது அதிகாரிகள் அவருக்குத் தகவல் தருகிறார்களா. அதெல்லாம் கிடையாது.கற்பனையாக எதையாவது பேசி நாடகமாடுகிறார் என்றார் ஆற்காடு வீராசாமி.
இன்று சட்டசபையில் நடந்த அனல் பறக்கும் விவாதத்தின் எதிரொலியாக அவையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது.












Click it and Unblock the Notifications