கர்நாடகத்தில் தரம்சிங் ஆட்சி கவிழ்கிறது: உருவாகிறது பாஜக-கெளடா கூட்டணி அரசு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 78 இடங்களை வென்றபாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.

காங்கிரஸ் 67 இடங்களிலும் தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் 58 இடங்களிலும் வென்றன. இதையடுத்துகாங்கிரஸ்-கெளடா இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தனர். காங்கிரஸைச் சேர்ந்த தரம்சிங் முதல்வரானார்.

கெளடாவின் எதிரி நம்பர் ஒன்னான முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாமகாராஷ்டிராவுக்கு கவர்னராக்கப்பட்டு மும்பைக்கு பேக் செய்யப்பட்டார். சோனியாவிடம் நிபந்தனை விதித்து கெளடா தான்அவரை கர்நாடகத்தை விட்டு தூர அனுப்பினார்.

ஆனால், மகாராஷ்டிரத்தில் இருந்தபடியே தனது அரசியல் காய்களை நகர்த்தி வரும் கிருஷ்ணா அவ்வப்போது கெளடாவுடன்மோதி வருகிறார். இன்போசிஸ் நிறுவனத்துக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக தரம்சிங்குக்கு நெருக்கடி தந்தார் கெளடா.

கிருஷ்ணாவுடன் சேர்ந்து கொண்டு இன்போசிஸ் அதிபர் நாராயணமூர்த்தி அரசியல் செய்வதாகவும் தனக்கு எதிராகசெயல்படுவதாகவும் புலம்பினார் கெளடா. இதை நாராயணமூர்த்தி மறுத்ததோடு, தான் வகித்த சில அரசு சார்ந்த பதவிகளைராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார்.

இதையடுத்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அரசு சலுகை காட்டக் கூடாது, பெங்களூரிலேயே ரோடு போட்டுக் கொண்டிருக்காமல்ஊரகப் பகுதிகளையும் கவனிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார் கெளடா.

இதனால் பெங்களூர் சாலைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. போக்குவரத்து நெரிசலும், குண்டும் குழியுமான சாலைகளால்நகரம் திணறி வருகிறது. இதனால் பல சாப்ட்வேர் நிறுவனங்கள் பெங்களூரை விட்டு இடம் பெயர திட்டமிட்டு வருகின்றன.

இவ்வாறாக கெளடா பல வகையிலும் அரசை செயல்பட விடாமல் முடக்கி வந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதில்,ஆச்சரியகரமாக காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வென்றனது. அடுத்த இடத்தை பாஜக பிடித்தது. மூன்றாவதுஇடத்துக்கு கெளடாவின் கட்சி தள்ளப்பட்டது.

ஊரகப் பகுதிகளிலேயே கெளடாவுக்கு பெரும் தோல்வி கிடைத்தது. காரணம், சித்தராமையா. முன்னாள் துணை முதல்வரான இவர்கெளடாவின் கட்சியில் மிக முக்கியத் தலைவராவார். ஆனால், கெளடாவின் மகன்கள் இருவரும் கட்சியில் செய்து வரும்அராஜகத்தைப் பொறுக்க முடியாமல் கட்சியை விட்டு விலகினார். அவருடன் 9 எம்எல்ஏக்களும் கட்சியை விட்டு விலகினர்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அவரது கட்சி பல இடங்களில் கெளடாவின் கட்சியை மண்ணைக் கவ்வவைத்தது.

இந் நிலையில் மைசூர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஆட்சியைப் பிடிக்க சித்தராமையாவின் கட்சியுடன் கைகோர்க்கத்தயாரானது காங்கிரஸ். இதை ஜீரணிக்க முடியாத கெளடா, தனது கட்சியுடன் மட்டுமே காங்கிரஸ் கூட்டு சேர வேண்டும் எனநிபந்தனை விதித்தார்.

ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் வென்ற களிப்பில் இருக்கும் காங்கிரஸ் ஏற்கத் தயாராக இல்லை. மாநிலத்தை ஆளுவதுதொடர்பாக மட்டுமே கெளடாவுடன் கூட்டணியே தவிர, உள்ளாட்சி நிர்வாகங்களைப் பிடிக்க யாருடன் வேண்டுமானாலும்கூட்டணி அமைக்க தங்களுக்கு உரிமை உண்டு என மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிவிட்டார்.

கார்கேவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா முழு ஆதரவு அளித்து வருகிறார். சோனியா காந்தியிடமும் கார்கேயும் கிருஷ்ணாவும் பேசிசித்தராமையாவுடன் கூட்டணி அமைக்க ஒப்புக் கொள்ள வைத்துவிட்டனர்.

இதையடுத்து திடீரென மாஜி பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தார் கெளடா. காங்கிரசும்-சித்தராமையாவும் கூட்டணி அமைத்தால்பாஜகவுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சியை மாற்றத் தயங்க மாட்டேன் என காங்கிரசுக்கு மிரட்டல் சிக்னல்கொடுத்தார் கெளடா.

ஆனால், பாஜகவுடன் கெளடா எந்தக் காரணம் கொண்டும் கூட்டணி சேர மாட்டார் என்று கருதும் காங்கிரஸ் கெளடாவின்மிரட்டலை மதிக்கவில்லை. தொடர்ந்து சித்தராமையுடன் கொஞ்சிக் குலாவி வருகிறது.

இந் நிலையில் கெளடாவும் சும்மா தான் மிரட்டல் விடுத்தாரே தவிர, பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் தன்னை ஆதரிக்கும்சிறுபான்மையினர், பிற்பட்டோரின் வாக்குகளை இழக்க நேரிடும் என அஞ்சுகிறார்.

காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தால் தேர்தலை சந்திக்கலாம் என்பது கெளடாவின் திட்டம். பாஜகவுடன் கூட்டணி அமைக்க அவர்தயாராக இல்லை.

ஆனால், கெளடாவின் மகனும் அமைச்சருமான குமாரசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கத் தீவிரமாகஉள்ளார். தேர்தலை சந்திக்க குமாரசாமியும் அவருக்கு ஆதரவாக உள்ள கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்களும்தயாராக இல்லை.

பாஜகவை ஆதரிக்க ஒரே ஒரு நிபந்தனையைத் தான் குமாரசாமி விதித்துள்ளார். அதாவது, தன்னை முதல்வராக்க வேண்டும்என்பது தான் குமாரசாமியின் ஒரே நிபந்தனை.

இதை பாஜகவும் ஏற்கத் தயாராகிவிட்டது. காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு கெளடாவுடன் கூட்டணி சேர ஆர்வமாய்இருக்கும் பாஜக தலைமை இந்த வேலைகளை ஒருங்கிணைக்க வெங்கையா நாயுடுவை பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளது.

கெளடாவின் விருப்பத்தையும் மீறி பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ள குமாரசாமிக்கு கட்சியின் பெரும்பாலானஎம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

குமாரசாமியை கெளடா சமாதானப்படுத்தி பின் வாங்கச் செய்தாலும் எம்எல்ஏக்களில் பெரும்பான்மையானோர் தேர்தலைசந்திக்கத் தயாராக இல்லை. மாறாக பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்கின்றனர்.

தனது கட்சி உடைவதைத் தவிர்க்க ஒன்று தொடர்ந்து காங்கிரஸையே கெளடா ஆதரித்தாக வேண்டும் இல்லாவிட்டால்பாஜகவுடன் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தாக வேண்டும் என்ற நிலைக்கு கெளடா தள்ளப்பட்டுள்ளார்.

தேர்தலை சந்திப்போம் என்று கெளடா கூறினால், அந்தக் கட்சியே உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம்உடைந்தால் காங்கிரஸ் அரசு கவிழும்.

இப்போதைக்கு பிரச்சனையைத் தள்ளிப் போடலாம் என்று கருதிய கெளடா, பிப்வரியில் இறுதி முடிவெடுக்கப் போவதாகக் கூறிவந்தார். ஆனால், எம்எல்ஏக்களிடையே பொறுமை இல்லை. உடனடியாக காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு பாஜகதலைமையில் ஆட்சி அமைக்கலாம் என்கின்றனர்.

பாஜகவை ஆதரிக்க 42 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. இந் நிலையில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தைகெளடாவின் மகன் குமாரசாமி கூட்டினார். அதில், தரம்சிங் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவது குறித்தும் பாஜகவுடன்கைகோர்ப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஆனால், கூட்டத்துக்குப் பின் வெளியில் வந்த குமாரசாமி, காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு நீடிக்கும். ஒரு பிரச்சனையும் இல்லைஎன்றார். ஆனால், ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து பேசப்பட்டதாக நிருபர்களிடம் எம்எல்ஏக்கள் காதைக் கடித்தனர்.

இந் நிலையில் ஆட்சி கவிழ்வதைத் தடுக்க காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. ஆட்சி போனாலும் அடுத்து தேர்தல் தான்நடக்க வேண்டுமே தவிர, பாஜக-கெளடா கூட்டணி அரசு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற திட்டத்துடன் காய்களைநகர்த்தி வருகிறது காங்கிரஸ்.

இப்படி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், எனது அரசுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறிக்கொண்டிருக்கிறார் முதல்வர் தரம்சிங். இன்று திடீரென கவர்னர் சதுர்வேதியை சந்தித்த தரம்சிங் இந்த விவகாரம் குறித்துவிேவாதித்ததாகத் தெரிகிறது.

சமீபகாலத்தில் கர்நாடகத்தில் மிக மோசமான ஆட்சிகளில் ஒன்றாக தரம்சிங்கின் நிர்வாகம் கருதப்படுகிறது. தொடர்பான செய்திகள்ஜே.எச்.பாட்டீல் அரசு வெட்டியான ஒரு ஆட்சியைத் தந்தது. அதே போன்ற ஒரு செயலற்ற அரசாக தரம்சிங்கின் ஆட்சி இருந்துவருகிறது.

இந் நிலையில் நாளை கர்நாடக சட்டசபை கூடப் போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+