தேர்தல் பணிகள்: காங். பார்வையாளர் வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியைத் தயார்படுத்துவது தொடர்பாக விவாதிக்க தமிழகத்திற்கான காங்கிரஸ்பொறுப்பாளரான முன்னாள் கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி வருகிற 25ம் தேதி சென்னைக்கு வருகிறார்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக வீரப்ப மொய்லி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சிநிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்து அவர் ஆலோசனைகள் நடத்தினார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுடனும்அவர் ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு கெளரவமான வகையில், தகுதிக்கேற்ற வகையில் தொகுதிகள்ஒதுக்கீடு செய்யப்படும். கூட்டணி ஆட்சி குறித்து தக்க சமயத்தில் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்கும் என்றும் அவர்தெரிவித்தார்.

இந் நிலையில் பொறுப்பாளர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகிற 25ம் தேதி மொய்லி சென்னைக்கு வருகிறார். சென்னைசத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். காங்கிரஸ் கட்சியின் பல்வேறுகோஷ்டிகளின் தலைவர்களையும் அவர் சந்திக்கிறார்.

தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை தயார்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை இந்த சந்திப்பின்போதுமேற்கொள்ளப்படவுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின்னர் தமிழகத்தில் தேர்தல்பணிகளை கட்சி மேலிடம் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+