நெரிசல் பலி: எதிரிகளின் சதி என்கிறார் ஜெ
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் பலியான சம்பவத்திற்கு எனது அரசியல் எதிரிகளின் சதிச் செயலேகாரணம் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளை போர்க்காலஅடிப்படையில் நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டேன். அதன்படி உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் 33 லட்சம் குடும்பங்களுக்கும், சென்னை நகரில் ஆறரை லட்சம் குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகள்வழங்கப்பட்டன. மழை, வெள்ள நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்ட விதம் குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர்,உள்துறை அமைச்சர், மத்திய நிபுணர் குழுக்கள் தமிழக அரசைப் பாராட்டியுள்ளன.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எனது அரசியல் எதிரிகள், அரசுக்கும், எனக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றகெட்ட எண்ணத்துடன் திட்டமிட்டு எம்.ஜி.ஆர். நகர் சம்பவத்தை நிகழ்த்தினர்.
டிசம்பர் 18ம் தேதி காலை 9 மணிக்குத்தான் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,திமுகவைச் சேர்ந்த மாநிகராட்சி கவுன்சிலர் தனசேகரனும், அவரது சகாக்களும் அதிகாலையிலேயே உதவிகள் வழங்கப்படுவதாகவதந்தியை பரப்பியதே, இந்தக் கோரச் சம்பவத்திற்குக் காரணம்.
மற்றபடி அரசின் அஜாக்கிரதையாலோ அல்லது அலட்சியத்தாலோ இந்த கோரச் சம்பவம் நடைபெறவில்லை என்பதைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications