முனீர் ஹோதா பணி நீக்கம்: மத்திய அரசு ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதாவின் தற்காலிக பணி நீக்க உத்தரவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானிக்கு சிறையில் சிலசலுகைகள் காட்டியதாக கூறி ஹோதாவை தமிழக அரசு கடந்த 31.7.2004 அன்று தற்காலிக பணி நீக்கம் செய்தது. அவர் மீதுவிசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தனது பணி நீக்க உத்தரவை எதிர்த்து மத்திய பணியாளர் துறையில் முறையீடு செய்தார் ஹோதா. இதைப் பரிசீலித்த மத்திய அரசு,ஹோதாவின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்துள்ளது.
இதையடுத்து அவர் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இருப்பினும் அவருக்கு என்ன பதவி கொடுக்கப்படும் என்பதை தமிழகஅரசுதான் தீர்மானிக்க வேண்டும்.
முனீர் ஹோதா முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்து பின்னர் வேண்டாதவர்கள் பட்டியலுக்குப் போனவர்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications