டெல்லி-பாட்னா விமான முன் டயர்கள் வெடிப்பு
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
டெல்லியில் இருந்து பாட்னா சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் போயிங் விமானம் தரையிறங்கும்போது அதன் முன் டயர்கள்இரண்டும் வெடித்துச் சிதறின. ஆனால், விமானத்தை விமானிகள் மிகுந்த சிரமத்துக்கிடையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்ததால்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
ஐ.ஏ-809 விமானம் இன்று பகல் 3.47 மணிக்கு ஜெயப் பிரகாஷ் நாராயணன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோதுஇச் சம்பவம் நடந்தது.
ஹெவி லேண்டிங் எனப்படும் அதி வேகமாக தரையிறங்கியதால் இச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. முன் டயர்கள் இரண்டுமேவெடித்த நிலையிலும் விமானத்தை விமானிகள் தொடர்ந்து கட்டுபாட்டில் வைத்ததால் அதிலிருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பினர்.












Click it and Unblock the Notifications