இன்றும் 8 இலங்கை அகதிகள் தமிழகம் வருகை
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இன்று (புதன்கிழமை) மேலும் 8 தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளனர்.
இலங்கையில் உள் நாட்டுப் போர் மூளும் அபாயம் அதிகரித்து வருவதையடுத்து அங்கிருந்து தமிழர்கள் உயிர் தப்பி தமிழகம்வந்தவண்ணம் உள்ளனர். கடந்த 12ம் தேதி முதல் இவர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதுவரை மொத்தம் 53 பேர் வந்துள்ளனர்.இலங்கையிலிருந்து வரும் இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சமுனைக்கு 8 பேர் வந்தனர்.
அவர்களிடம் தனுஷ்கோடி போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களும் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் பெரும் பதட்டம் நிலவுவதாகவும், பெண்களை கற்பழிப்பது,பச்சிளம் குழந்தைகளைக் கொல்வது என இலங்கை ராணுவம் அட்டூழியம் செய்வதாக அகதிகள் தெரிவிக்கின்றனர்.
புலிகளின் கண்வெடி தாக்குதல்:
இதற்கிடையே இலங்கையில் விடுதலைப்புலிகள் இரு வேறு இடங்களில் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை வீரர்ஒருவர் இறந்தார். 19 வீரர்கள் காயமடைந்தனர். இதில் 10 பேர் கடற்படையினர் ஆவர்.
யாழ்ப்பாணத்தில் சரசாலை என்ற இடத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர்சம்பவ இடத்திலேயே இறந்தார். 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதை தொடர்ந்து திரிகோணமலை மாவட்டத்தில் கடற்படையினர் சென்று கொண்டிருந்த பஸ் விடுதலைப்புலிகள் வைத்திருந்தகண்ணி வெடியில் சிக்கியது. இருப்பினும் அந்த பஸ் தப்பிவிட்டது. அதில் இருந்த 10 வீரர்கள் காயமடைந்தனர். ஒருவரின்நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கடற்படையினர் சென்ற பஸ் கண்ணி வெடிக்கு தப்பிடவே விடுதலைப்புலிகள் அதிரடியாக பஸ் மீது திடீரென துப்பாக்கி சூடுநடத்தினர். இதையடுத்து கடற்படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக இத்தாக்குதல் நீடித்தது. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் புலிகள்தரப்பில் இருவர் இறந்தனர். பொது மக்களில் ஒருவரும் இத் தாக்குதலில் சிக்கி இறந்தார்.
விடுதலைப் புலிகள் இலங்கை அரசு இடையே அமைதிப் பேச்சு வார்த்தை மீண்டும் தொடங்க நார்வே தலைமையிலானகுழுவினர் முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இது போன்ற தாக்குதல் சம்பவம் தொடர்ந்து வருவதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications