சோனியாவை மிரட்டினார் கருணாநிதி: ஜெ புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்துக்கு போதிய வெள்ள நிவாரண நிதியை வழங்கினால் மத்திய அரசுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவோம் எனகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசியில் மிரட்டியதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

சட்டசபையில் பேசிய பாஜக உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், போதிய வெள்ள நிவாரண நிதியை வழங்காத மத்திய அரசைக்கண்டித்து முதல்வர் பேராட்டம் நடத்த வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த ஜெயலலிதா,

பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகவும் நல்லவர். பெரிய மனதுடையவர். ஆனால், அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன.தமிழகத்துக்கு போதிய நிதி வழங்க அவர் தயாராகவே உள்ளார். ஆனால், அதை அவரால் செய்ய முடியவில்லை.

இரண்டாவது தவணையாக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ. 500 கோடி நிதி உதவியை அறிவித்தவுடன் காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் கருணாநிதி.

இனியும் தமிழக அரசுக்கு நிதியுதவி வழங்கினால் ஆதரவை வாபஸ் பெற்று விடுவோம் என்று மிரட்டினார்.

நாங்கள் கேட்ட தொகை கிடைக்கும் வரை விட மாட்டோம். எல்லா வகையிலும் போராடி நிதியைப் பெறுவோம். திமுகவின்நெருக்குதல்களால் தான் டெல்லிப் போவதையே நான் தவிர்த்து வருகிறேன் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+