நல்லா இருக்க மாட்டீங்க: வாசன் சாபம்
சென்னை:
டிவி, பத்திரிக்கைகளில் பெயர் வர வேண்டும் என்பதற்காக நம்மை தூற்றிப் பேசுபவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது,அவர்கள் நன்றாக இருக்கவும் முடியாது என்று திண்டிவனம் ராமமூர்த்தி தரப்புக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்மறைமுகமாக சாபமிட்டார்.
மறைந்த மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் 66வது பிறந்த தின விழா சென்னைசத்தியமூர்த்தி பவனில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன், வாழப்பாடியாரின் படத்திற்கு மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினார்.குமரி அனந்தன் உள்ளிட்ட பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். பின்னர் வாசன் பேசுகையில்,
வாழப்பாடியாரை பற்றி அனைவருக்கும் தெரியும். காவிரிப் பிரச்சினையின்போது தனது மத்திய அமைச்சர் பதவியை தூக்கிஎறிந்து வரலாறு படைத்தவர். அவரது வழியில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
ஆனால் இன்றைக்கு சிலர், தங்களது முகம் டிவியிலும், பத்திரிக்கையிலும் வர வேண்டும் என்பதற்காக நம்மைப் பற்றிக் குறைகூறுகிறார்கள். இவர்கள் நல்லவர்கள் அல்ல, நன்றாகவும் இவர்கள் இருக்க முடியாது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்கமுடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. இதற்குக் காரணம், தொண்டர்களின் ஒற்றுமை உணர்வுதான்.
ஆனால் சிலர் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்று புகார் கூறுகிறார்கள். யாருக்கு எத்தகைய பிரதிநிதித்துவம் தேவைஎன்பது எனக்கு நன்றாகத் தெரியும். செய்ய வேண்டிய நேரத்தில் நிச்சயம் செய்வேன். அதை விடுத்து டிவி, பத்திரிக்கைகள்மூலமாக யாரும் நம்மை மிரட்ட முடியாது, அவர்களின் பேச்சும் எடுபடாது என்றார் வாசன்.
சமீப காலமாக வாசனை குறி வைத்து தாக்குதல் நடத்தி வரும் திண்டிவனம் ராமமூர்த்தியை டேக்கில் செய்யும் விதமாகவே,வன்னியத் தலைவரான வாழப்பாடியாரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் வாசன் கலந்து கொண்டு பேசியதாக திண்டிவனம் தரப்புகூறுகிறது.
அட, இதுலயும் பாலிடிக்ஸாப்பா..., காங்கிரஸ்ன்னா காங்கிரஸ் தான்..












Click it and Unblock the Notifications