ஏற்காடு மலையில் பெண்கள் நிர்வாண பூஜை?
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் உள்ள வெள்ளக்கடை கிராமத்தில், போலீஸ் தடையை மீறி பெண்கள் நிர்வாண பூஜைநடத்துவதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளக்கடை கிராமத்தில், ஆண்டுதோறும், காணும் பொங்கலுக்கு அடுத்த நாள் இரவு பெண்கள் கூடி நிர்வாண பூஜைநிடத்துவது வழக்கம். இந்த பூஜையின்போது கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறி விடுவார்கள்.பெண்கள் மட்டுமே கிராமத்தில் இருப்பார்கள்.ஆனாலும், இதை தூரத்தில் இருந்து பார்க்க மலையுச்சிக்கு ஆண்கள் போவது வழக்கம். இதைக் காண்பதற்காக சேலத்தில் இருந்துஒரு பெரும் இளைஞர் பட்டாளமே ஏற்காடு மலை ஏறும். மரங்களில், மலை வளைவுகளில் ரகசியமாய் பதுங்கி பைனாக்குலரில்இதைப் பார்த்து ரசிப்பது இவர்களது வழக்கம்.
இந்த நிர்வாண பூஜை கடந்த சில ஆண்டுகளாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அரசு இந்த பூஜைக்குத் தடை விதித்தது.இருப்பினும் தடையையும் மீறி ரகசியமாக நிர்வாண பூஜை நடந்து கொண்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் இந்த ஆண்டும் நிர்வாண பூஜை நடக்காமல் தடுக்க அரசு அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமாரன் உத்தரவின் பேரில், அதிகாரிகள் குழு வெள்ளக்கடைக்கு அனுப்பப்பட்டது.
பெண் தாசில்தார் ஜீவரத்தினம் மற்றும் போலீஸார் வெள்ளக்கடைக்கு சென்றபோது பொதுமக்கள் அவர்களை முற்றுகையிட்டுதடுத்து நிறுத்தினர். ஆண்கள் யாரும் கிராமத்திற்குள் வரக் கூடாது என்று அவர்கள் கூறினர்.
மேலும், அம்மனை மட்டுமே நாங்கள் வணங்குகிறோம். நிர்வாண பூஜை எதுவும் நடத்தப்படுவதில்லை. மனித உரிமைகள்மீறப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 2 பெண் அதிகாரிகள் மட்டும் ஊருக்குள் வந்து பூஜையைப் பார்வையிடலாம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.அதன்படி ஜீவரத்தினம் மற்றும் இன்னொரு பெண் அதிகாரி ஆகியோர் மட்டும் ஊருக்குள் உள்ள கோவிலுக்குச் சென்று பூஜைகுறித்த ஏற்பாடுகளைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
நிர்வாண பூஜை நடக்கிறதா இல்லையா என்று உறுதியாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications