அம்மா சொன்னா போட்டி: செந்தில்
தஞ்சாவூர்:
வரும் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டால் போட்டியிடுவேன் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார்.
தஞ்சைக்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த நடிகர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:தஞ்சையில் நடந்த தமிழர் திருநாள், கலை இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நானும் நடிகர் கார்த்திக்கும்வந்தோம்.
சுபாஷ் சந்திரபோஸ் விட்டுப்போன பணியை இளைஞர்கள் தொடங்க வேண்டும். அம்மா (ஜெயலலிதா) ஆணையிட்டால் தென்மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற துணையாக இருப்பேன்.
எம்ஜிஆர் மறைந்த போது அவரது உடலை ராணுவ வண்டியில் ஏற்றியபோது அருகில் அமரச் சென்ற ஜெயலலிதாவை கீழேதள்ளிவிட்டார்கள். மறுநாள் நான் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினேன். திருச்சியில் அதிமுக மாநாடு நடந்த போதுமுதலில் பேசியது நான் தான்.
எனவே அம்மா வாய்ப்பு கொடுத்து ஆணையிட்டால் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்றார் செந்தில்.
இவரை எதிர்த்து கவுண்டமணியை நிறுத்தலாமோ...












Click it and Unblock the Notifications