ஆட்சிக் கவிழ்ப்பு: கெளடா-மகன் கூட்டு நாடகம்?
பெங்களூர்:
மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை தேவே கெளடாவின் மகன் குமாரசாமி வலுக்கட்டாயமாக தன்னுடன் இழுத்துச்சென்றுள்ளதாக கர்நாடக முதல்வர் தரம்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
40 எம்எல்ஏக்களை தன்னுடன் கொண்டு சென்று கட்சியை உடைத்த குமாரசாமி பாஜக ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கவும்முதல்வராகவும் திட்டமிட்டுள்ளார்.ஆனால், கட்சியின் தலைவரான தேவே கெளடா தொடர்ந்து தரம்சிங்கை ஆதரிப்பதாகக் கூறி வருகிறார். அவரிடம் 12எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாமல் மைனாரிட்டி அரசாகிவிட்ட தரம்சிங் அரசு பதவி விலகவேண்டும் என்று பாஜக-குமாரசாமி கூட்டணி கோரி வருகிறது.
ஆனால், தனக்கு ஆதரவு இருப்பதாகவும் வரும் 27ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிப்பதாகவும் தரம்சிங் கூறிக் கொண்டிருந்தார்.இந் நிலையில் இன்று பல்டி அடித்து, 27ம் தேதிக்கு முன்பே நான் பதவி விலகிச் செல்லவும் கூட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கும் வாக்கெடுப்பில் நாங்கள் வெல்லவும் வாய்ப்புள்ளது என்றார். எப்படி என்றுநிருபர்கள் கேட்டதற்கு, அதிசயங்களும் நடக்கலாம் தானே என்றார்.
மேலும் இப்போது குமாரசாமியுடன் உள்ள எம்எல்ஏக்கள் விரும்பிச் செல்லவில்லை. வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் என்றார்.
இதற்கிடையே தனது மகனை முதல்வராக்க காங்கிரஸை பணியச் செய்ய தேவே கெளடா தான் இந்த கட்சிப் பிளவு டிராமாவையேநடத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தனது மகனை முதல்வராக்க காங்கிரஸ் ஒப்புக் கொண்டால் குமராசாமியை பாஜக பக்கமிருந்து பிரித்துக் கொண்டு வர கெளடாமுயல்வார், இல்லாவிட்டால் பாஜக உதவியோடு மகன் முதல்வராவதை கெளடா தடுக்கப் போவதில்லை என்கிறார்கள்.
கட்சியில் பிளவு, பாஜகவோடு கூட்டணி என்பதெல்லாம் டெல்லியில் வாஜ்பாயையும் அத்வானியையும் கெளடா சந்தித்தபோதேஎழுதப்பட்ட நாடகம் தான், இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் கெளடாவின் எதிர்ப்பாளர்கள்.
இதற்கிடையே தனது கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 40 எம்எல்ஏக்களையும் பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒருரிசார்ட்டில் தங்க வைத்து பாதுகாத்து வருகிறார் குமாரசாமி. அவர்களை அவர்களது குடும்பத்தினர் கூட தொடர்பு கொள்ளமுடியவில்லையாம்.
இவர்களை விலைக்கு வாங்க காங்கிரஸ் முயல்வதாகக் கூறும் பாஜக-குமாரசாமி கூட்டணி, இந்த எம்எல்ஏக்களை பாஜக ஆளும்ஒரு மாநிலத்துக்குக் கொண்டு செல்லவும் முயன்று வருகிறது.












Click it and Unblock the Notifications