மகாபலிபுரம் அருகே தகவல் தொழில் நுட்ப பூங்கா: கமல்நாத்
சென்னை:
மத்திய அரசின் சார்பில் மகாபலிபுரம் அருகே 410 ஏக்கர் பரப்பளவில் கடல் சார்ந்த தொழில் பூங்கா மற்றும் தகவல் தொழில் நுட்பபூங்கா ஆகியவை மிக விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத்கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் மத்திய அரசின் சார்பில் கட்டப்பட்ட இந்திய அறிவுசார் சொத்துரிமை கட்டட திறப்பு விழா நடந்தது. மத்தியவர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.விழாவில் மத்திய அமைச்சர் பேசியதாவது:
தற்போதுள்ள பொருளாதார வளர்ச்சி தொடருமேயானால் அடுத்த சில ஆண்டுகளில் உலகமே இந்தியாவின் பொருளாதாரத்தைசார்ந்து இருக்கும். ஆண்டுக்கு 350 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் நாட்டின் வர்த்தகம் பெருகியுள்ளது. இது மேலும்பெருகும்.
இந்தியாவில் நிலவும் அமைதி, தொழில் செய்வதற்கான சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெளிநாட்டைச் சேர்ந்த பலமுதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். மத்திய அரசின் சார்பில் பல திட்டங்கள் செய்யப்படுகின்றன.
சென்னையில் இருந்து 28 கிமீ தொலைவில், மகாபலிபுரம் அருகே 300 ஏக்கர் பரப்பில் கடல்சார் தொழில் பூங்கா ஒன்றுஅமைக்கப்பட உள்ளது. அதே இடத்தில் 110 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில் நுட்ப பூங்காவும் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை சமீபத்தில் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இத்திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள்துவங்க உள்ளன என்று பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications