நீதிமன்ற அவமதிப்பு: தாசில்தாரைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத சென்னை அம்பத்தூர் தாசில்தாரை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வில்லிவாக்கம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் மற்றும் ராமலிங்கம். இவர்களது நிலத்திற்கு அருகே உள்ள அரசுபுறம்போக்கு நிலத்தில் ஏகப்பட்ட பேர் ஆக்கிரமித்தனர். இதனால் இவர்களது நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து இருவரும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்றம் 3 மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட அம்பத்தூர் தாசில்தார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.இதையடுத்து தாசில்தார் மீது ராமலிங்கம், ராஜ்குமாரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன் அம்பத்தூர் தாசில்தார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறுஉத்தரவிட்டிருந்தார். ஆனால் தாசில்தார் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த போலீஸாருக்கு நீதிபதி ரவிராஜ பாண்டியன் உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications