2500 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிராம நிர்வாக அதிகாரி எனப்படும் வி.ஏ.ஓ காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பியாகவேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. இல்லாவிட்டால் தேர்தல் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படக் கூடியவாய்ப்புகள் உள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு வேலை நியமனத் தடை சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக கிராம நிர்வாக அதிகாரி காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 12,506 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 2500 பணியிடங்கள்காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்துறை மூலம் இவர்கள் நியமிக்கப்படுவர். இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம்விநியோகிக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவர். தேர்தல் பணிகள்ஆரம்பிப்பதற்குள் இந்த தேர்வு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திலேயே அதிக அளவிலான காலியிடங்கள் தூத்துக்குடியில் தான் உள்ளது. இங்கு 161 கிராம நிர்வாக அதிகாரிபணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு அடுத்து நெல்லையில் 158 பணியிடங்களும், ஈரோட்டில் 131 பணியிடங்களும்,கோவையில் 126 இடங்களும், நாகையில் 118 இடங்களும், மதுரையில் 109 இடங்களும், தஞ்சையில் 107 இடங்களும்காலியாக உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+