முத்திரைத் தாள் மோசடி வழக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை :

போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்ட சிலர்ஆஜராகாததால், வழக்கை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தெல்கி, முகம்மது அலி உள்ளிட்ட 11 பேருக்கு இன்று குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட இருந்தது.

இந்தியாவையே உலுக்கிய போலி முத்திரைத்தாள் மோசடி சம்பவம், தமிழகத்திலும் நடந்திருப்பது கடந்த 2003ம் ஆண்டுகண்டுபிடிக்கப்பட்டது. சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி உள்ளிட்ட 3 பேர் தமிழகத்தில் இந்த மோசடியை மேற்கொண்டது தெரியவந்து கைது செய்யப்பட்டார்கள்.

முகம்மது அலி தவிர உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி அதிகாரி ராமசாமி சாஹு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களுடன் அப்துல் கரீம் தெல்கி, அவனது தமிழக ஏஜென்ட் நிஜாமுதீன் உள்ளிட்ட 11 பேர் மீது சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.

இந்த வழக்கில் சமீபத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றுஇவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது 11 பேருக்கும் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்றும் இதனால் அனைவரும்தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் சிபிஐ நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி சம்மன்கள் அனுப்பியிருந்தார்.

இதைத் தொடர்ந்து முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி அதிகாரி ராமசாமி சாஹு உள்ளிட்டோர்ஆஜராகியிருந்தனர். தெல்கி உள்ளிட்ட 3 பேர் வரவில்லை.

இதுதொடர்பாக சிபிஐ வழக்கறிஞர் ஜேக்கப் டேணியல் நீதிபதியிடம் கூறுகையில், தெல்கி உள்ளிட்டவர்கள் புனேசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதில் சிக்கல் உள்ளது.

அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர்களிடம் விசாரணை நடத்தஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி வழக்கை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றையதினம் தெல்கி உள்ளிட்டவர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே போலி முத்திரைத் தாள் வழக்கில், மும்பை நீதிமன்றம் தெல்கிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளதுநினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+