அரசின் கையில் மேலும் 6 கேபிள் டிவி நிறுவனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை :

சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் ஹாத்வே ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து மேலும் 6 நிறுவனங்களை கையகப்படுத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.

எம்.எஸ்.ஓ. எனப்படும் பன்முக கேபிள் சேவையைத் தரும் சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் ஹாத்வே நிறுவனம்ஆகியவற்றை கையகப்படுத்த தனி சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும்6 கேபிள் டிவி நிறுவனங்களை கையகப்படுத்துவது தொடர்பான திருத்த மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்த மசோதாவில், சென்னை, மதுரை,கோவை சுமங்கலி கேபிள் விஷன் நிறுவன அலுவலகங்கள், சென்னையில் உள்ள ஹாத்வே நிறுவனத்தைத் தொடர்ந்து மேலும் 6எம்.எஸ்.ஓ.க்கள் கையகப்படுத்தப்படவுள்ளன.

அவற்றின் விவரம்:

பாபா கேபிள் விஷன், சென்னை; பாலிமர் கேபிள், சேலம்; தமிழ்த்தாய் கேபிள் விஷன், கோவை; அஜய் கேபிள் டிவி, மதுரை;பீப்பிள்ஸ் கேபிள் நெட்வொர்க், மதுரை; கரன் டிவி, திருநெல்வேலி.

இந்த நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 11 நிறுவனங்கள் தமிழக அரசினால் கையகப்படுத்தப்படவுள்ளதாக அரசுதெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+