சட்டசபைத் தேர்தலில் வைகோ போட்டி?
வேலூர்:
சட்டசபைத் தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடக் கூடும் என்று கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன்கூறியுள்ளார்.
தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக எல்.கணேசன் வேலூர் வந்திருந்தார். அப்போதுசெய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசியல் அரங்கில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இணையான செல்வாக்கும்,மக்கள் மதிப்பும் பெற்ற தலைவர் வைகோ.கடந்த தேர்தலில் பல உள்ளாட்சி இடங்களை மதிமுக கைப்பற்றியது. அதே புத்துணர்வுடன் இப்போது சட்டசபைத் தேர்தலையும்சந்திக்கவுள்ளோம். மக்களவைத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியும் தற்போது எங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் எங்கு நின்றாலும் வெற்றி பெறக் கூடிய வல்லமையும், செல்வாக்கும் பெற்றவர் வைகோ.இதற்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி மட்டுமே கடந்த 1957ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல்வரை சென்னை முதல் திருச்சி வரை பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாதனைக்கு உரியவராக உள்ளார்.
வைகோ விரும்பினால் எனது சொந்த தொகுதியான ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடலாம். இது எனது தனிப்பட்ட விருப்பம்என்றாலும் இதற்கான வாய்ப்பை மறுப்பதிற்கில்லை என்றார் எல்.கணேசன்.












Click it and Unblock the Notifications