மோனோ ரயில் திட்டத்தை எதிர்த்து பாமக ஆர்ப்பாட்டம்
சென்னை:
சென்னை நகரில் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவதை எதிர்த்து பாமக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை நகரின் போக்குவரத்து சிக்கலைக் குறைக்க மோனோ ரயில் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாகஉலகளாவிய டெண்டரும் கோரப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசின் முடிவைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் இன்று கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், மெட்ரா ரயில் திட்டத்தை நிறைவேற்றினால்தான் சென்னை நகர மக்களுக்கு உண்மையான பலன் கிடைக்கும். ஆனால் அதை விடுத்து மிகவும் பாதுகாப்பற்ற மோனோ ரயில்திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் ஒரு பயனும் கிடையாது.
இந்தத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி எம்.எஸ்.ஓக்களை அரசே கையகப்படுத்தவுள்ளதாக முதல்வர் கூறுகிறார். அப்படியென்றால், அதிககல்விக் கட்டணம் வசூலிக்கும் சுய நிதி பொறியியல் கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்த முன் வருமா என்பதை முதல்வர் விளக்கவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications