ஸ்ரீரங்கம் கோவிலில் வைரக்கல் மாயம்: பக்தர்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி கோவிலில் உள்ள நம்பெருமாள் சிலையின் காலில் அணிவிக்கப்பட்டிருந்த வைரக் கல்காணவில்லை. இதை அறிந்த பக்தர்கள் பீதியடைந்து கோவிலில் கூடினர்.ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமியின் இரு கால்களிலும் வைரக்கல் அணிவிக்கப்பட்டிருந்தது. கோவிலில் நடந்து வந்த 20நாள் வைகுண்ட ஏகாதசி விழாவின் இறுதி பகுதியான வேடுபரி விழா சமீபத்தில் நடந்தது.
இந்த விழாவின் போது குதிரை வாகனத்தில் நம்பெருமாளின் விக்கிரகம் தூக்கி வைக்கப்பட்டு பக்தர்களால் எடுத்துக் கொண்டுஓடப்படும். இந்த விழா முடிந்த பிறகு, நம்பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகை உள்ளிட்டவை சோதனைசெய்யப்பட்டன. அப்போது தான் வலது காலில் இருந்த வைரக்கல் காணாமல் போனது தெரிய வந்தது.
இதன் மதிப்பு உறுதியாகத் தெரியவில்லை. நம்பெருமாளின் வைரக்கல் காணாமல் போன தகவல் பரவியதும் ஏராளமானபக்தர்கள் கோவிலில் திரண்டு கவலையுடன் காணப்பட்டனர். வைரக் கல்லைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications