கர்நாடகம் திரும்பும் பாஜக எம்.எல்.ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தமிழக சுற்றுப்பயணத்தில் உள்ள கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.இன்று இரவு சேலம் வழியாக அவர்கள் பெங்களூர் திரும்புகிறார்கள்.

கர்நாடகத்தில் தரம்சிங்குக்கு கொடுத்து வந்த ஆதரவை மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் ஒரு பிரிவு வாபஸ் பெற்றதைத் தொடர்ந்துபாஜக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சென்னைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏக்கள் சொகுசுப் பேருந்துகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச்செல்லப்பட்டு வருகின்றனர். முதலில் மகாபலிபுரம், பின்னர் கொடைக்கானல் என சுற்றிய அவர்கள் இன்று மதுரை வந்தனர்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் பய பக்தியுடன் சாமி கும்பிட்டனர். கோவிலின் தல வரலாற்றைஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

மீனாட்சி அம்மன் கோவிலின் பிரமாண்டத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவர்கள் தமிழர்களின் கலை நயம் குறித்தும் வியப்புதெரிவித்தனர். இன்று இரவு அவர்கள் பேருந்துகள் மூலம் சேலம் செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து பெங்களூர்திரும்புகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+