கலாமுடன் திமுக எம்.பிக்கள் சந்திப்பு
டெல்லி:
தமிழக அரசு கொண்டு வந்துள்ள கேபிள் டிவி கையகப்படுத்துதல் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தரக் கூடாது என்று தமிழகஆளுநருக்கு அறிவுரை வழங்குமாறு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை திமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.
தமிழக சட்டசபையில் சுமங்கலி கேபிள் விஷன், ஹாத்வே உள்ளிட்ட சில எம்.எஸ்.ஓக்களை கையகப்படுத்துவது தொடர்பானசட்ட மசோதா சமீபத்தில் கொண்டு வரப்பட்டது.இதனால் திமுக தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டவுடன், திமுக தலைவர் கருணாநிதி,மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆளுநர் பர்னாலாவை அவசரம் அவசரமாக சந்தித்து இந்த மசோதாவுக்கு ஒப்புதல்வழங்கக் கூடாது என்று கோரினர்.
இந்த நிலையில் திமுக எம்.பிக்கள் குழு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நேரில் சந்தித்து இந்த சட்ட மசோதா குறித்துமுறையிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ராசா மற்றம் எம்.பிக்கள் அடங்கிய குழு கலாமை செவ்வாய்க்கிழமைநேரில் சந்தித்தது.
பின்னர், ஜெயலலிதா அரசு பழிவாங்கும் போக்குடன் நடந்து கொள்கிறது. அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவேஇந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என்று ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்றும்அவர்கள் கலாமை வலியுறுத்தினர்.
குடியரசுத் தலைவரை திமுக எம்.பிக்கள் சந்தித்தது குறித்து திமுக தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications