சானியா, ஷோபனாவுக்கு பத்மஸ்ரீ, டாக்டர் சாந்தாவுக்கு பத்மபூஷன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Sania Mirza
பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்த 106 பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அரசு அறிவித்துள்ளது.

இதன்படி தமிழக சிவில் சர்வீஸ் அதிகாரி சி.ஆர்.கிருஷ்ணசாமி ராவ் பத்ம விபூஷன் விருது பெறுகிறார். இதே போல் மகசேசேவிருது பெற்ற சென்னையை சேர்ந்த பிரபல புற்று நோய் நிபுணர் டாக்டர்.வி.சாந்தாவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது.மேலும் கலைச் சேவைக்காக நடிகர் விஜய்யின் தாயார் ஷோபனா சந்திரசேகருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

மலையாள படத் தயாரிப்பாளரும் தாதா சாகேப் பால்கே விருது பெற்றவருமான அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு பத்ம விபூஷன்,டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

புகழ் பெற்ற எழுத்தாளர் மற்றும் மலைவாழ் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக அறப்போரில் ஈடுபட்ட மகாஸ்வேதாதேவி, பிரபல மெக்சிகோ விஞ்ஞானி நார்மன் போர்லாக், பிரபல பின்னணி பாடகர் பஞ்கஜ் உதாஜ், விமான பைலட் விஜய்பட்,முன்னணி வங்கியாளரான எச்டிஎப்சி வங்கியைச் சேர்ந்த தீபக் பரேக், தொழிலதிபர் தருண்தாஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்தலைவர் ராமதுரை, திரைப்பட தயாரிப்பாளர் சாய் பரன்ஜாபே, முதுபெரும் நடிகர் ஏ.கே.ஹங்கால் போன்றவர்களும் விருதுபெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பேட்மிண்டன் வீராங்கனை மதுமிதா பிஷ்த், குண்டு எறிதல் வீரர் பகதூர் சிங் ஆகிய மூன்று விளையாட்டு வீரர்கள் பத்ம ஸ்ரீ விருதுபெற்றுள்ளனர்.

திரைப்பட தயாரிப்பாளர் சாய் பரஞ்சபே மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவீ ஆகியோர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். பாடகர் பங்கஜ் உதாஸ் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிக உயரிய விருதான பாரத் ரத்னாவிருது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக யாருக்கும் வழங்கப்படவில்லை.

விருது பெற்ற தமிழர்கள்:

தமிழக சிவில் சர்வீஸ் அதிகாரி சி.ஆர். கிருஷ்ணசாமி ராவ் பத்ம விபூஷன் விருது பெறுகிறார். அதே போல் மகசேசே விருது பெற்றசென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் பிரபல புற்று நோய் நிபுணர் டாக்டர்.வி.சாந்தாவுக்கு பத்ம பூஷன் விருதுவழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ துறையில் சாதனை படைத்தற்காக ஜெய்வீர் அகர்வால் பத்ம பூஷன் விருது பெறுகிறார். இதே போல் மறைந்தபின்னணிப் பாடகி பி.லீலா, பத்ம பூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் மருத்துவத்திற்காக பூவராகவன் பழனியப்பன், மோகன் காமேஸ்வரன், கலைக்காக காயத்ரி சங்கரன் மற்றும் ஷோபனாசந்திரசேகர், அறிவியல் மற்றும் பொறியியல் துறையை சேர்ந்த ஆர். பாலசுப்பிரமணியன், தொழில் மற்றும் வர்த்தகத் துறையைசேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+