பிரபல ஜவுளிக்கடை அதிபர் சாலை விபத்தில் பலி
கோவில்பட்டி:
தமிழகத்தின் மிகப் பிரபலமான ஆர்.எம்.கே.வி. ஜவுளிக்கடையின் அதிபர் விஸ்வநாதான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிஅருகே நடந்த சாலை விபத்தில் பலியானார். அவரது குடும்பத்தினர் காயமடைந்தனர்.
சென்னை மற்றும் திருநெல்வேலியில் உள்ள பிரபல ஜவுளிக் கடை ஆர்.எம்.கே.வி. இந்த நிறுவனத்தின் அதிபரான விஸ்வநாதன்,அவரது தம்பி சிவக்குமார் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்றனர்.மதுரையிலிருந்து கார் மூலம் நெல்லைக்கு பயணித்தனர். கார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த சத்திரப்பட்டிவிலக்கு என்ற இடத்தில் வந்தபோது சாலையின் ஓரமாக ஒரு டிராக்டர் பழுதடைந்து நின்று கொண்டிருந்தது.
கடும் பனி மூட்டம் காரணமாக டிராக்டர் நிற்பதை கார் டிரைவரால் கவனிக்க முடியவில்லை.
வேகமாக வந்த கார், டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணித்த விஸ்வநாதன், அவரது மனைவி தனலட்சுமி,தம்பி சிவக்குமார், அவரது மனைவி ஹேமா, அவரது மகன் ஸ்ரீராம், கார் டிரைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்தனர்.
அதேபோல டிராக்டரில் அமர்ந்திருந்த கூலித் தொழிலாளர்கள் 3 பேரும் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் நெல்லை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன்மரணம் அடைந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications