சென்னை: உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 9 நீதிபதிகள்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 9 நீதிபதிகளை நியமிப்பதற்கு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து தலைமை நீதிபதிஏ.பி.ஷா கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாகவே நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகள், போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு 11 நீதிபதிகள் ஒரேநாளில் நியமிக்கப்பட்டு பதவியேற்றனர்.
இன்னும் சில நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்கு தலைமைநீதிபதி ஏ.பி.ஷா பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒருவர் மற்றும் 8வழக்கறிஞர்களின் பெயரையும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications