திண்டிவனத்துக்கு வெற்றி-காங்கிரசிலிருந்து விரைவில் நீக்கம்
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் ஜாதிரீதியில் பிரச்சனை கிளப்பி, அதிமுகவுக்கு ஆதரவாக தனி ஆவர்த்தனம் நடத்தி வரும் திண்டிவனம்ராமமூர்த்தியை நீக்க காங்கிரஸ் மேலிடம் ஒரு வழியாக முடிவு செய்துவிட்டது.
முதலில் கூட்டணி கட்சியான திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்த திண்டிவனம், இப்போது கட்சியில்வன்னியர்-வன்னியரல்லாதோர் பிரச்சனையைக் கிளப்பி ஜி.கே. வாசனையும் விமர்சித்து வருகிறார். அவ்வப்போது கட்சித்தலைமைக்கும் சூடு போட்டு வருகிறார்.ராமமூர்த்தியை அடக்கி வைக்க நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அது ஒன்றும் பயனளிக்கவில்லை. முன்பை விட தீவிரமாகதனது எதிர்பார்ப்பை தீவிரபடுத்தியுள்ள ராமமூர்த்தி அன்னை இந்திரா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி அதற்கு ஆள்சேர்க்க மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
இந் நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ராமமூர்த்தியுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டார். அதற்காகதிண்டிவனம் ராமமூர்த்தியை நேரில் சந்தித்து பேசினார். தொலைபேசியிலும் பேசினார். அம்முயற்சியும் தோல்வி அடைந்தது.
உண்மையைச் சொன்னால், தன்னை கட்சி நீக்க வேண்டும் என்பதற்காக பல வகைகளிலும் போராடி வருகிறார் திண்டிவனம்.
தேர்தல் நேரத்தில் இவரை கட்சியை விட்டு நீக்கினால் வன்னியர் வாக்குகளை இழக்க நேரிடும் என்றும், அவர் அதிமுகவுடன்கூட்டணி போட்டால் காங்கிரசுக்கு பிரச்சனை வரும் என்பதால் மேலிடம் அமைதி காத்து வந்தது.
இப்போது திண்டிவனத்தின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துவிடும் போல் தெரிகிறது.
ஒரு வழியாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து விரைவில் அவர்கட்சியில் இருந்து நீக்கப்படுவார். இதையடுத்து அதிமுகவுடன் கூட்டணி போடுப் போகும் திண்டிவனத்துக்கு நல்ல கவனிப்போடுசில சீட்களும் தரப்படும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications