வெளியுறவு அமைச்சராகிறார் ப.சிதம்பரம்?
டெல்லி - கும்பகோணம்:
தன்னிடம் இருந்து பெட்ரோலியத்துறை பறிக்கப்பட்டு விளையாட்டுத்துறை தரப்பட்டது குறித்து கவலையில்லை என மத்தியஅமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறினார்.
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களான இளங்கோவன், மணிசங்கர் அய்யரின்இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டது. மணிசங்கர் அய்யர் இது வரை பஞ்சாயத்து ராஜ் துறையுடன் பெட்ரோலியத்துறையையும் கவனித்து வந்தார்.இப்போது பெட்ரோலியத்துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு மும்பை காங்கிரஸ் விவிஐபியான முரளி தியோராவிடம்தரப்பட்டுள்ளது. மணிசங்கர் அய்யருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மணிசங்கர் அய்யர் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2004ம் ஆண்டு மே மாதம் நான் பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி ஏற்றேன். அதற்கு முன்னதாகவே பஞ்சாயத்து ராஜ்துறை பொறுப்பையும் நான் வகித்து வந்தேன். அதனால் பெட்ரோலிய துறை இலாகா என்னிடம் இருந்து மாற்றப்பட்டது குறித்துசிறிது கூட வருத்தம் இல்லை.
ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மயிலாடுதுறை தொகுதிக்கு இரு மத்தியஅமைச்சர்கள் (மணி சங்கர் அய்யர், வாசன்) இதன் மூலம் கிடைத்துள்ளார்கள். இந்த தொகுதி மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றார்.
பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின் மத்திய அமைச்சரவை மீண்டும் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்போதுநிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு வெளியுறவுத்துறையும் மணிசங்கர் அய்யருக்கு நிதித்துறையும் ஒதுக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதித்துறையிலேயே சிதம்பரம் நீடிக்க விரும்பினால் அய்யர் வெளியுறவுஅமைச்சராகவும் வாய்ப்புள்ளது.
அய்யர் ஒரு முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி என்பது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications