கருணாநிதியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
சென்னை:
மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், திமுக தலைவர் கருணாநிதியை அவரதுஇல்லத்தில் சந்தித்து பேசினார்.
ஜி.கே.வாசன் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் சென்னைவந்துள்ளார். திங்கள்கிழமை தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், புதுவையில் மூப்பனார் சிலை திறப்பு உள்ளிட்டநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்குச் சென்ற வாசன், சுமார் அரை மணி நேரம் பேசினார். பின்னர் வெளியே வந்தஅவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் இப்போது பேசவில்லை. தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்டவுடன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்என்றார் வாசன்.