வரி இல்லா சென்னை மாநகராட்சி பட்ஜெட்
சென்னை:
சென்னை மாநகராட்சியில் வரிகள் ஏதுமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத் தொடர் புதன்கிழமை தொடங்கியது. அதிமுக உறுப்பினரும், நிதிக் குழுத்தலைவருமான விஜயராமகிருஷ்ணா பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.2005-06ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப்படி வரவுகள் ரூ. 553.58 கோடியாகும். திருத்திய மதிப்பீட்டில் இது ரூ. 644.32கோடியாகவும், 2006-07ல் ரூ. 657.40 கோடியாகவும் உயரும்.
2006-07 ல் செலவு ரூ. 644.47 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சொத்து வரியாக 2006-07ம் ஆண்டு சொத்து வரி வசூல் ரூ.275 கோடியளவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் வரி ரூ. 60 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முத்திரைத்தாளுக்கான கூடுதல் வரி ரூ. 105 கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கேளிக்கை வரி ரூ. 17 கிடைக்கும். தொழில்உரிமைக் கட்டணம், கட்டட உரிமைக் கட்டணம், அங்காடி உரிமக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம், விளம்பர வரி மற்றும்ஏனைய இனங்களின் மூலம் 2006-07ல் ரூ. 100.40 கோடி கிடைக்கும்.
பட்ஜெட்டில் புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை. வரி ஏதும் இல்லாத உபரி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவிஜயராமகிருஷ்ணா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications