கார்த்திக்கை நம்பி ஏமாந்தேன்: நடிகர் செந்தில்
சென்னை:
![]() |
நடிகர் கார்த்திக் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று நம்பியிருந்தேன். ஆனால் கருணாநிதியை அவர் சந்தித்துப் பேசியதுஎனக்கு பெரும் அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது என்று அதிமுகவில் சேர்ந்துள்ள நடிகர் செந்தில் கூறியுள்ளார்.
தேவர் சமூகத்தைச் சேர்ந்த காமெடி நடிகர் செந்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நேற்று அதிமுகவில் சேர்ந்தார்.சமீபகாலமாக தனது சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக்கை ஆதரித்து வந்த செந்தில் முன்னதாக சிறிது காலம் விஜய்காந்தை ஆதரித்துவந்தார்.
இந் நிலையில் அதிமுகவுடன்தான் கார்த்திக் கூட்டணி வைப்பார் என்று செந்தில் கூறி வந்தார். ஆனால் கார்த்திக் கருணாநிதியைசந்தித்ததால் அதிருப்தி அடைந்துவிட்டதாகக் கூறி சட்டுப்புட்டென்று அதிமுகவில் போய் சேர்ந்து விட்டார்.
இது குறித்துக் கூறுகையில், நான் ஆரம்ப காலத்திலிருந்தே அதிமுக அனுதாபிதான். முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு நிறையமதிப்பும், மரியாதையும் உண்டு. அதனால்தான் கார்த்திக்கை அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமாறு கூறி வந்தேன். அவரும்சேருவார் என்று நம்பியிருந்தேன். ஆனால் கருணாநிதியை சந்தித்து என்னைப் போன்ற பலருக்கு அவர் அதிர்ச்சி அளித்துவிட்டார்.
உண்மையில் நான் கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சியில் சேரத்தான் முடிவு செய்திருந்தேன். ஆனால் கார்த்திக்கின் போக்கினால்அதிருப்தி அடைந்துதான் அதிமுகவில் சேர்ந்து விட்டேன். திமுகவுடன் கூட்டணி வைக்கும் பார்வர்ட் பிளாக் கட்சியில் சேருவதுநரகத்தில் சேருவது போல, அதனால்தான் சொர்க்கமாக திகழும் அதிமுகவில் சேர்ந்துள்ளேன்.
கார்த்திக் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அவரை சுற்றியிருப்பவர்கள் அவரை தவறான பாதைக்கு அழைத்துச்செல்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டுததான் கருணாநிதியை அவர் சந்தித்திருக்கக் கூடும். அவருக்கு மன மாற்றம் ஏற்பட்டுவிட்டது. உண்மையில், தலைவர் பதவியை ஏற்றதும் அவர் முதலில் ஜெயலலிதாவைத்தான் சந்தித்திருக்க வேண்டும்.அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் கார்த்திக்குக்கு மதிப்பு. அவர் வருவார் என்றுதான் நான் நம்புகிறேன். திமுகவுடன்கூட்டணி வைத்தால் தோல்வியைத்தான் அவர் சந்திக்க நேரிடும்.
கார்த்திக் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி உடையும் வாய்ப்பே இல்லை. அது எப்போதுமே அம்மா பக்கம்தான். இதை கார்த்திக்புரிந்து கொள்ள வேண்டும, புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.
அதிமுகவில் என்னை அம்மா சேர்த்துக் கொண்டது மகிழ்ச்சியைத் தருகிறது. முதலில் திருச்செந்தூர் போய் முருகனை தரிசிக்கஉள்ளேன். பின்னர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன். மிகக் கடுமையாக நான் பிரசாரம் செய்யவுள்ளேன்.
அதேசமயம் யாரையும் தாக்கிப் பேச மாட்டேன். முதல் பிரசாரக் கூட்டம் வட சென்னையில் நடக்கிறது என்றார் செந்தில்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications