சுதாகரன் செக்ஸ் டார்ச்சர்: நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
![]() |
முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் தன்னிடம் பேசிய ஆபாசப் பேச்சுக்கள் அடங்கிய ஆடியோ கேசட்உள்ளிட்ட ஆதாரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு திரைப்படத் தயாரிப்பாளர் ப்ரியா நாயருக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் வளர்ப்பு மகனும் சசிகலாவின் அக்காள் மகனுமான சின்ன எம்ஜிஆர் சுதாகரன் மீது கஞ்சா வழக்கில் இருந்து பலவழக்குகள் உள்ளன. ஏகப்பட்ட கோடிகளுக்கு திடீரென அதிபதியான இந்த சிவாஜி குடும்பத்து மருமகன் இப்போது பெண்ணைசெக்ஸ் டார்ச்சர் செய்த விவாரத்தில் சிக்கியுள்ளார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம், பெண் திரைப்படத் தயாரிப்பாளர் ப்ரியா நாயர் என்பவர் ஒரு புகார் மனுவைக்கொடுத்தார். அதில் தன்னுடன் சுதாகரன் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்கோரியிருந்தார்.
இந்தப் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, ப்ரியா நாயருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளதாகபோலீசார் கண்டுபிடித்தனர். ப்ரியாவைப் பற்றி எக்குத் தப்பான பொய்யான தகவல்கள் கசிய விடப்பட்டன.
![]() |
இதையடுத்து இனி போலீஸாரை நம்பிப் பயனில்லை என்பதால் உயர் நீதிமன்றத்தை அணுகினார் ப்ரியா. இந்த ஆபாச டார்ச்சர்குறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி ஜெயபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுதாகரன் தொலைபேசியில் ஆபாசமாகபேசிய பேச்சுக்கள் அடங்கிய ஆடியோ கேசட் உள்ளிட்ட ஆதாரங்களை போலீஸாரிடம் மனுதாரர் ஒப்படைக்க வேண்டும்.
(சுதாகரன் தினமும் இரவு, பகல் பாராமல் ப்ரியாவின் அவயங்களை விவரித்து மிகக் கேவலமாக தொலைபேசியில் பேசியதைப்ரியா ரெக்கார்ட் செய்துவிட்டார். ஆனால், தனது வாய்சை யாரோ மிமிக்ரி செய்திருக்கலாம் என மாஜி வளர்ப்பு மகன் கூறிவருகிறார்)
போலீஸார் இவற்றைப் பரிசீலித்து வருகிற 9ம் தேதியன்று பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்குவிசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக














Click it and Unblock the Notifications