அமைச்சரவை மாற்றம்; புதுவைக்கு ஏமாற்றம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் இந்த முறையும் புதுவை கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளம், ஆந்திரம் என மூன்று மாநிலங்களில் ஆங்காங்கே சிறு சிறு நிலப்பரப்பாக பிரிந்து காணப்படுகிறது புதுவை யூனியன் பிரதேசம். சென்னைக்கு அருகே பாண்டிச்சேரி, நாகைக்கு அருகே காரைக்கால், கேரளாவுக்குள் மாஹே, ஆந்திராவுக்குள் ஏனாம் என சிறு சிறு பிரிவுகளாக சிதறிக் காணப்படும் புதுவை யூனியன் பிரதேசம், 1954ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இந்தியாவுடன் இணைந்தது.அதன் பின்னர் கடந்த 52 ஆண்டு கால புதுவை அரசியல் வரலாற்றில் இதுவரை மொத்தமே 3 பேர்தான் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.
கடைசியாக எம்.ஓ.எச்.பாரூக், 1991ம் ஆண்டு நரசிம்மராவ் அமைச்சரவையில் மத்திய சிவில் விமானப் போக்குரவத்து இணை அமைச்சராக பதவி வகித்தார். அதற்குப் பிறகு புதுவையைச் சேர்ந்த யாரும் மத்திய அமைச்சராகவில்லை.
இத்தனைக்கும் புதுவை யூனியன் பிரதேசம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் கீழ் உள்ளது.












Click it and Unblock the Notifications