பகையாளி குடும்பத்தை உறவாடி கெடு
திருச்சி:
சட்டசபைத் தேர்தலில் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறதோ, அந்த எண்ணிக்கையில் பாதியளவுக்கு காங்கிரஸ்கட்சிக்கு தொகுதிகள் கொடுக்கப்பட வேண்டும் என்று திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
திருச்சியில் நடந்த அதிருப்தியாளர் கூட்டத்தில் பேசுவதற்காக திண்டிவனம் ராமமூர்த்தி திருச்சி வந்தார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பகையாளி குடும்பத்தை உறவாடி கெடு என்பார்கள். அந்த நிலையில் தான் இன்றுகாங்கிரஸ் கட்சி உள்ளது, தமிழக கூட்டணியும் உள்ளது.கூட்டணி ஆட்சி என்பதில் எந்த சமரசம் கிடையாது. இதை நான் சொல்லவில்லை, தொண்டர்கள் தான் சொல்கிறார்கள்.ஆட்சியில் பங்கு கொடுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் விட மாட்டோம்.
இந்தத் தேர்தலில் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறதோ அதில் பாதியளவுக்கு தொகுதிகள் நமக்கு கொடுத்தாகவேண்டும். இல்லாவிட்டால் தொண்டர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஓட்டுப் போடவும் மாட்டார்கள். எந்தக்கட்சிக்கும் காங்கிரஸ் இளைத்ததல்ல.
நாடாளுமன்றத் தேர்தலில் அவசரம் அவசரமாக பேச வேண்டியிருந்தது, எனவே கூடுதல் தொகுதிகளைப் பெற முடியவில்லைஎன்றார்கள்.
இப்போது தான் நிறைய நேரம் இருக்கிறதே, சாவகாசமாக பேசி காங்கிரஸுக்கு உரிய தொகுதிகளைப் பெற்று, கட்சியின்கவுவரத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு தலைவர்களுக்கு உள்ளது. இதை அவர்கள் மறந்து விடக் கூடாது என்றார் திண்டிவனம்.












Click it and Unblock the Notifications