சன் டிவிக்கு எதிராக முஸ்லீம் அமைப்பு போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முஸ்லீம்கள் குறித்து தவறான செய்தியை ஒளிபரப்பி வருவதாகக் கூறி தமிழ்நாடு தவ்பீக் முஸ்லீம்கள் ஜமாத் அமைப்பின் சார்பில்ஏராளமானோர் சன் டிவி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு தவ்பீக் முஸ்லீம் ஜமாத் சார்பில் சமீபத்தில் கும்பகோணத்தில் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாடு குறித்து சன்டிவியில் ஒளிபரப்பான செய்தி தங்களை இழிவுபடுத்துவதாக கூறி இன்று காலை சென்னையில் உள்ள சன் டிவி தலைமைஅலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தவறான செய்தியை ஒளிபரப்பிய சன் டிவி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சன் டிவி தலைவர் கலாநிதிமாறன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரது வீடுகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் கோஷமிட்டனர்.
முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர்அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications