அதிமுக, திமுக ஊழல் கட்சிகள்: விஜயகாந்த்
குளித்தலை:
அதிமுக, திமுக கட்சிகள் தங்கள் ஆட்சியில் மாறி, மாறி ஊழல் செய்துள்ளன என்று குளித்தலையில் நடந்த பிரசாரத்தில்விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் தேர்தல் பிரசாரத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்சியும் மற்றொரு கட்சியிலிருந்து உருவானது. ஆனால் நான் சொத்தை விற்று கட்சியைதொடங்கியவன். தமிழகத்தில் அதிமுக, திமுக மாறி, மாறி ஆட்சி செய்கின்றனர். போட்டி போட்டுக் கொண்டு ஆட்சிசெய்கின்றனரா? இல்லையே, ஊழல் தான் செய்கின்றனர்.
அதிமுக, திமுக கட்சிகளை பார்த்து நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும்ஜாதி கட்சிகளை உங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாதீர்கள்.
இந்தக் கட்சிகள் 30, 40 என சீட் கேட்பது எதற்கு? மக்களுக்கு சேவை செய்வதற்காக இல்லை. வெற்றி பெற்றதும் சம்பாதிக்கத்தான். இவர்கள் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறட்டுமே? எதற்காக கூட்டணி என்று அலைகின்றனர்?
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் திமுக ஆட்சி செய்கிறது. இவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மத்திய அரசுதமிழகத்துக்கு நிதி ஒதுக்கினால், நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவோம் என்று திமுக அவர்களை மிரட்டுகிறது.
இம்முறை ஒரு மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த எனது கட்சிக்கு நீங்கள் வாக்களியுங்கள். தேமுதிக 234 தொகுதியிலும் தனித்துபோட்டியிடுகிறது. நான் ஊழலற்ற ஆட்சி அமைத்து வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவேன் என்று பேசினார்விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications