விஜயகாந்த்தை சீரியசா எடுக்க கூடாது-கண்ணப்பன்
சென்னை:
விஜயகாந்த் கூட்டங்களுக்கு வருவோர் எல்லாம் அவரது கட்சித் தொண்டர்களே கிடையாது. உண்மையில் விஜயகாந்த் பார்க்கஎப்படி இருப்பார் என்பதை வேடிக்கை பார்க்க வரும் கூட்டம் தான் என்று மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் ராஜ. கண்ணப்பன்நக்கலடித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் ராஜ.கண்ணப்பன் பேசுகையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைமையுடன் உரியநேரத்தில் பேசுவோம். கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால், தொகுதிப் பங்கீடு சற்று தாமதமாகத்தான் நடந்து முடியும்.ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு வங்கிக்கேற்ப இடங்கள் கேட்க வேண்டும். அதுதான் தர்மம், நியாயம். எங்களுக்கு இத்தனைசீட் வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக கோரக் கூடாது. அந்த அடிப்படையில்தான் நாங்கள் சீட் கேட்கப் போகிறோம்.நெருக்கடி தரும் வகையில் சீட் கேட்க மாட்டோம்.
எங்களது கட்சிக்கு 155 தொகுதிகளில் பலம் உள்ளது, வாக்கு வங்கி உள்ளது (?!). இதில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைஅடையாளம் காணும் பணி, தேர்தல் பணிக்குழு அமைத்தல் போன்ற வேலைகளில் விரைவில் ஈடுபடவுள்ளோம்.
விஜயகாந்த் போன்றவர்களால் அனுபவம் வாய்ந்த திமுக கூட்டணிக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. அவர் அரசியல் முதிர்ச்சிஇல்லாதவர். மக்கள் பிரச்சினைக்காக ஒருமுறை கூட போராட்டம் நடத்தியதில்லை இந்த விஜய்காந்த்.
அவரது கூட்டத்துக்கு வருகிறவர்கள் எல்லாம் தொண்டர்கள் இல்லை, விஜய்காந்தை நேரில் பார்த்தால் எப்படி இருப்பார்என்பதை அவரை வேடிக்கை பார்க்க வரும் கூட்டம்தான் அது.
அவரது பேச்சுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. நீண்ட காலம் போராடியவர்களைத்தான் மக்கள் நம்புவார்கள்,அவர்களால்தான் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியும். தேர்தலுக்கு முன்பாக கட்சி ஆரம்பித்து, ஆட்சியைப் பிடிப்பேன் என்றுசொல்வதெல்லாம் கேலிக்குரிய செயல்.
விஜயகாந்த்தையெல்லாம் யாருமே சீரியஸாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது. மக்கள் தமிழ் தேசம் சார்பில் போட்டியிடவிரும்புவோர் ரூ. 5,000 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் ராஜ.கண்ணப்பன்.
ரூ. 5,000 பற்றிய கவலை இல்லாதவர்களும், தைரியம் இருப்பபோரும் விண்ணப்பிக்கலாம்.... கடந்த சட்டமன்றத் தேர்தலில்ராஜ.கண்ணப்பனுக்கு (அப்போது வெறும் கண்ணப்பன்) 4 சீட் தந்தது திமுக. அதை கண்ணப்பன் வாங்கியதாக கூட அப்போதுபேசப்பட்டது நினைவுகூறத்தக்கது.
மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், காங்கிரசால் நான்கு பக்கமும் இடி வாங்கி வரும் திமுக இந்த முறை கண்ணப்பனுக்கு ஒரு சீட்கொடுப்பது கூட கஷ்டமே.












Click it and Unblock the Notifications