பண மோசடி: கஸ்தூரிராஜா-மனைவிக்கு முன்ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையைச் சேர்ந்த டாக்டரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்ததாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் ரஜினியின் சம்பந்தியும்இயக்குனருமான கஸ்தூரி ராஜா மற்றும் அவரது மனைவிக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை கே.கே.நகரில் வசித்து வரும் டாக்டர் பாலசுப்ரமணியம் என்பவர், தனது வீட்டை கஸ்தூரி ராஜாவுக்கு விற்றார். அந்தவகையில், அவருக்கு கஸ்தூரி ராஜா ரூ. 75,50,000 தர வேண்டியிருந்தது. இதில், ரூ. 25 லட்சம் பணம் மட்டுமே கஸ்தூரி ராஜாகொடுத்துள்ளார். மீதப் பணத்தைத் தராமல் இழுத்தடித்து வந்தார்.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறையில் டாக்டர் பாலசுப்ரமணியம் புகார் கொடுத்தார். இதையடுத்து கைதாவோம் என்றபயத்தில் முன் ஜாமீன் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தை கஸ்தூரி ராஜாவும், அவரது மனைவி விஜயலட்சுமியும் அணுகினர்.அங்கு அவர்களது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா,

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ. 10 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். பின்னர் ரூ. 45 லட்சத்து55,000க்கு உத்தரவாத ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் தலா ரூ. 5,000 ரொக்கம் மற்றும் அதேதொகைக்கு இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் அளித்து முன் ஜாமீன் பெறலாம் என தீர்ப்பளித்தார்.

2 வாரத்திற்குள் இதையெல்லாம் சமர்பித்து முன்ஜாமீன் பெற வேண்டும். இல்லாவிட்டால் இந்த உத்தரவு ரத்தாகி விடும் என்றும்நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+