மீண்டும் அதிமுகவில் நடிகர் விஜயக்குமார்
சென்னை:
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நடிகர் விஜயக்குமார், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று மீண்டும் அதிமுகவில்இணைந்தார்.
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நடிகர் விஜயக்குமார், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று மீண்டும் அதிமுகவில்இணைந்தார்.
கார்த்திக் திமுக பக்கம் போகலாம் என எதிர்பார்க்கும் அதிமுக தலைமை அவர் மூலமாக அவர் சார்ந்த முக்குலத்தோரின் வாக்குகள்அதிமுகவுக்கு எதிராக போவதைத் தடுக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. காளிமுத்துவை அவைத் தலைவராக்கப்பட்டார்.முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த செந்திலை கட்சியில் சேர்க்கப்பட்டார்.
கார்த்திகை சமாளிக்க இப்போது இச் சமூகத்தைச் சேர்ந்த நடிகர்களுக்கு வலை வீசப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாஜிஹீரோ, மாஜி வில்லன், இப்போதைய குணச்சித்திர நடிகரான நடிகர் விஜயக்குமார் மீண்டும் அதிமுகவில் இழுக்கப்பட்டுள்ளார்.
ரஜினிகாந்த்தின் மிக நெருங்கிய நண்பரான விஜயக்குமார் ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்தவர் தான். எம்ஜிஆர் இருந்தபோதுகொஞ்ச காலம் அதிமுகவுக்குப் போய்விட்டுத் திரும்பினார். அப்போது கையில் இரட்டை இலை பச்சை கூட குத்திக் கொண்டார்(தகவல்: நமது வாசகர்கள் கே.கே.சுப்பு மற்றும் சத்யநாராயண்). ஆனால், ஜெயலலிதாவின் வருகைக்குப் பின் ஒதுங்கியேஇருந்தார்.
இந் நிலையில் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்குஅதிமுக அடிப்படை உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா கொடுத்து வாழ்த்தினார்.
அதிமுகவின் ஓட்டு வங்கியான முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் கார்த்திக் திமுக கூட்டணி சார்பில் அதிமுகவுக்கு எதிராகபிரச்சாரத்தில் இறங்கினால் விஜய்குமார், செந்தில் மூலமாக அதிமுக எதிர் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications