ஜெயப்பிரதாவின் தம்பி மீது மனைவி புகார்
சென்னை:
![]() |
நடிகை ஜெயப்பிரதாவின் தம்பி ராஜ்பாபு தன்னை கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்வதாக அவரது மனைவி உஷா சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் செய்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்தவர் உஷா. இவர் ஜெயப்பிரதாவின் தம்பி ராஜ்பாபுவின் மனைவி. கணவர் மற்றும் குடும்பத்துடன் சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். ராஜ்பாபு-உஷா தம்பதிக்கு 6 வயதில் ராஜமுத்து என்ற மகனும் உள்ளான்.
ராஜ்பாபுவும் ஒரு நடிகர். ஆனால் சில படங்களிலேயே நடித்துள்ளார். இப்போது அண்ணா சாலையில் உள்ள ராஜ் திரையரங்கை அவர் நடத்தி வருகிறார்.
இந் நிலையில் உஷாவும், அவரது தாயார் விஜயாவும் சென்னை மாநகர காவல்துரை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஆணையர் நடராஜை சந்தித்து ஒரு புகார் கொடுத்தனர்.
![]() |
புகாரைக் கொடுத்து விட்டு வெளியே வந்த உஷா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் பெங்களூரைச் சேர்ந்தவள். எனது தந்தை சுந்தரம், தாயார் விஜயா. எனது தங்கை விஜயலட்சுமி, நடிகை ஆவார். கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஃபிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
ஃபிரண்ட்ஸ் படம் கன்னடத்தில் ஹப்பா என்ற பெயரில் வெளியானது. அதில் விஜயலட்சுமியுடன், ஜெயப்பிரதாவும் நடித்திருந்தார். அந்த சமயத்தில் விஜயலட்சுமியுடன், ஜெயப்பிரதா நெருங்கிப் பழகினார். படப்பிடிப்புக்கு நான் ஒருமுறை சென்றிருந்தபோது என்னைப் பார்த்த ஜெயப்பிரதா என்னைப் பிடித்துப் போய் தனது தம்பி ராஜ்பாபுவுக்காக பெண் கேட்டார்.
சரி என்று நாங்கள் ஒத்துக் கொண்டோம். அதன் பின்னர் 1999ம் ஆண்டு எங்களது திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் தி.நகரில் உள்ள ராஜ்பாபுவின் வீட்டில் வசித்து வந்தோம். எங்களுடன் ராஜ்பாபுவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் வசித்தனர்.
![]() |
திருமணத்தின்போது போதிய அளவில் நகைகள், வரதட்சணை கொடுத்தும் கூட திருமணமான பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி பணம் கேட்டு கொடுமைப்படுத்தத் தொடங்கினர்.
எனது தங்கை விஜயலட்சுமி பிரபல நடிகையாகி விட்டதால் அதிக அளவில் பணம் கேட்டு சித்திரவதைப்படுத்தனர். அடிக்கடி கார் வாங்கித் தருமாறும் கொடுமை நடந்தது.
ஜெயப்பிரதாவின் சகோதரி ஒருவர் என்னை தகாத வார்த்தை மற்றும் கடுமையான சொற்களால் டார்ச்சர் செய்வார். எனக்கு இப்போது 32 வயதாகிறது. ஆனால் எனது கணவரின் வயது 50.
திருமணத்தின்போது அவரது வயதை மிகவும் குறைத்துக் கூறி ஏமாற்றி விட்டனர்.
வீட்டில் எனக்கு நிம்மதியே இல்லை. எப்படியெல்லாம் தொந்தரவு செய்ய முடியுமோ, துன்பம் தர முடியுமோ அப்படியெல்லாம் செய்து என்னை இழிவாகவும், கேவலமாகவும் நடத்தி வந்தனர்.
எனது மகனுக்காகத்தான் இதையெல்லாம் பொறுத்து வந்தேன். இப்போது இதற்கு மேல் அங்கு வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால்தான் எனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.
இப்போது நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளேன். அங்கும் ராஜ்பாபு வந்து மகனைத் தருமாறும், நிம்மதியாக வாழ விட மாட்டேன் என்று கூறியும் மிரட்டி வருகிறார்.
இதனால்தான் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு எனது மகனையும், என்னையும் நிம்மதியாக வாழ வழி செய்து தருமாறு கோரி ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன்.
எனது கணவரை நான் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளேன் என்றார் உஷா.
நடிகை ஜெயப்பிரதா தற்போது சமாஜ்வாதிக் கட்சி எம்.பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உஷாவின் சகோதிரயான நடிகை விஜயலட்சுமி இப்போது சன் டிவியின் கன்னட மொழி டிவியான உதயாவில் தங்க வேட்டை (தமிழில் ரம்யா கிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சி) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ராஜபாபு சில படங்களில் நடித்திருந்தாலும் ஒரே ஒரு படத்தில் மட்டும் ஹீரோவாக நடித்தார். 1991ல் வெளியான அந்தப் படத்தின் பெயர் திருட்டு புருஷன்.. இது எப்டி இருக்கு?















Click it and Unblock the Notifications