ரூ. 1,023 கோடியில் திருப்பூர் குடிநீர் திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கான ரூ. 1,023 கோடி குடிநீர்த் திட்டத்தைமுதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 3 நகராட்சிகள், 629 கிராமங்களுக்கு குடிநீர்வழங்கும் குடிநீர்த் திட்டம் கடந்த 1995ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில்கொண்டு வரப்பட்டது.பின்னர் வந்த திமுக ஆட்சியில் இத்திட்டம் முடங்கிப் போனது. 2001ல் அதிமுகஆட்சிக்குவந்த பின்னர் இந்தத் திட்டம் மீண்டும் முடுக்கி விடப்பட்டது.
திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் மூலம் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேநிகழ்ச்சியில் திருப்பூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை வசதியையும்ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
ரூ. 1023 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தால் திருப்பூர்,வேலம்பாளையம், நல்லூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் திருப்பூரைச் சுற்றியுள்ள 629கிராமங்கள் பயன் பெறும்.
மொத்தம் 8 லட்சம் மக்கள் இந்த குடிநீர் திட்டத்தால் பயன்பெறவுள்ளனர் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications