For Daily Alerts
Just In
17ம் தேதி கூடும் திமுக தேர்தல் அறிக்கை குழு
சென்னை:
தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு வரும் 17ம் தேதி முதன்முதலாக கூடிஆலோசிக்கவுள்ளது.நாதன் தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழுவை அமைத்துள்ளார் கருணாநிதி. இதில் துரைமுருகன், பரிதி இளம்வழுதிபோன்ற அதிரடிப் படை இடம் பெற்றுள்ளது. இக்குழு வரும் 17ம் தேதி கூடி தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசிக்கவுள்ளது.
இதுதொடர்பாக குழு அமைப்பாளர் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குஅண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதில் உறுப்பினர்கள் அனைவரும்கலந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் சலுகைகள் மற்றும் பல்வேறு திட்டங்களை கவுண்டர் செய்யும் விதத்தில், ஸ்டிராங்கானதேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுக திட்டமிட்டுள்ளது. திருச்சி மாநில மாநாட்டில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
Comments
Story first published: Thursday, February 9, 2006, 5:30 [IST]