மருத்துவமனையில் ராமதாஸ்: கருணாநிதி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை திமுக தலைவர்கருணாநதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் பார்த்து நலம் விசாரித்தனர்.
தர்மபுரியில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் ராமதாஸுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அங்கு முதலுதவிசிகிச்சைகளை எடுத்துக் கொண்ட அவர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.இதன் காரணமாக சென்னையில் நேற்று நடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ராமதாஸ்பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், ஆற்காடுவீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நேரில் சென்று ராமதாஸிடம் நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications