சீட் கேட்கும் பிரசார பீரங்கி குண்டு கல்யாணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக சார்பில் கோவை மேற்கு தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு நடிகர் குண்டுகல்யாணம் விண்ணப்பம் அளித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி நூற்றுக்கணக்கான அதிமுகவினர்தொடர்ந்து விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள்அம்மாவுக்கு சீட் கேட்டு விண்ணப்பங்களை அளிக்கின்றனர். சைடில் தங்களுக்கும்ஒரு சீட் கேட்டு விண்ணப்பம் கொடுக்கின்றனர்.கடந்த 1ம் தேதி முதல் இதுவரை 7,500 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.வெள்ளிக்கிழமை மட்டும் 2,000 விண்ணப்பங்கள் குவிந்ததால், வாங்கியவர்கள்திணறிப் போயினர்.
தற்போது லைம்லைட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி, ஈரோடு மற்றும்பவானி தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி விண்ணப்பம் அளித்தார்.
காமெடி நடிகர் குண்டு கல்யாணம், கோவை மேற்கு தொகுதியில் சீட் கேட்டுவிண்ணப்பம் அளித்தார்.
ரொம்ப நாட்களாய் பிந்து கோஷுடன் சேர்ந்து அதிமுகவின் மிக முக்கியமான பிரச்சாரபோர்பர்ஸ் பீரங்கியாக குண்டு கல்யாணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications