போலீஸ் பாதுகாப்புடன் மகன் திருமணத்தில் அப்பு
தஞ்சாவூர்:
தஞ்சையில் நடந்த தனது மகன் திருமணத்தில் சங்கர்ராமன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்பு கலந்து கொண்டார்.
இத் திருமணத்தில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கடலூர்மத்திய சிறையில் இருந்து தஞ்சை கொண்டு வரப்பட்டார்.
தனது மகன் சரத்தின் திருமணத்தில் கலந்து கொள்ள தஞ்சை செல்ல ஜாமீனில் விட வேண்டும் என்று கோரி அவர்உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒரு நாள் மட்டும் சிறையிலிருந்து அவரைவிடுவித்து பாதுகாப்புடன் தஞ்சைக்கு அழைத்துச் சென்று திருமணம் முடிந்ததும் மீண்டும் கடலூர் சிறையில் அடைக்க வேண்டும்என்று உத்தரவிட்டது.
இதன்படி வியாழக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கடலூர் சிறையிலிருந்து அப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு தஞ்சாவூரில் திருமணம் நடைபெற்ற மண்டபத்தை அப்பு சென்றடைந்தார்.
பின்னர் காலை 7 மணியளவில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மகன் சரத், மருமகள் ஷாலினியை அப்புவாழ்த்தினார்.
பின்னர் திருமண விருந்தை அவர் ருசி பார்த்தார். பிறகு மதியத்திற்கு மேல் அங்கிருந்து புறப்பட்டார் அப்பு. இரவு அவர் கடலூர்சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
திருமண மேடையில் பட்டு வேட்டி, பட்டு சட்டை, அங்கவஸ்திரத்துடன் கலக்கிய அப்புவுக்கு இரு புறமும் போலீசார்நின்றிருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications