யாருடன் கூட்டணி?: 15ம் தேதி திருமா. அறிவிப்பு
வேலூர்:
சட்டசபைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறும் என்பதை வரும் 15ம் தேதி தெரிவிப்பதாகஅக் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றிருந்தது. மங்களூர் (தனி) தொகுதிஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திமுககூட்டணியில் இருந்து விலகியவர் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார்.இந்தத் தேர்தலில் இதுவரை எந்தக் கூட்டணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் இல்லை. பாமகவுடன் மட்டும் திருமாவளவன் மிகமிக நெருக்கமாக உள்ளார். திமுக கூட்டணியில் திருமாவளவனை சேர்க்க பாமக நிறுவனர் ராமதாஸ் கருணாநதியை, தொடர்ந்துவலியுறுத்தி வருகிறார். ஆனால் திருமாவளவனை சேர்ப்பது குறித்து இதுவரை கருணாநிதி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இதனால் அதிமுகவுடன் திருமாவளவன் கூட்டணி அமைக்கக் கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும், கடைசிவரைபொருத்திருந்து பார்ப்பது அதன் பிறகு முடிவெடுப்பது என்ற எண்ணத்தில் திருமாவளவன் காத்துள்ளார்.
இந் நிலையில் வேலூர் வந்த திருமாவளவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 120 தொகுதிகளில் வெற்றி,தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளது. தனித்து போட்டியிட்டால் 10 தொகுதிகளைவெல்வோம்.
எங்களது அமைப்பின் மையக் குழுக் கூட்டம் வருகிற 15ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் யாருடன்கூட்டணி வைப்பது, தேர்தல் அணுகுமுறை என்ன என்பதை முடிவு செய்ய உள்ளோம்.
14ம் தேதி சென்னையில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தவுள்ளோம். அதில் மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி (டாக்டர்ராமதாஸ்), கி.வீரமணி, பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
காவிரி ஆற்றை கர்நாடகம் ஆக்கிரமித்தது, பவானி ஆற்றை கேரளா ஆக்கிரமிப்பு செய்தது. இப்போது பாலாறு மற்றும் பென்னைஆற்றை ஆந்திர அரசு கபளீகரம் செய்கிறது. அண்டை மாநிலங்களால் தமிழகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது என்றார்திருமாவளவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications